/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிளாஸ்டிக் குப்பையால் துார்ந்த வடிகால்வாயால் சுகாதார சீர்கேடு
/
பிளாஸ்டிக் குப்பையால் துார்ந்த வடிகால்வாயால் சுகாதார சீர்கேடு
பிளாஸ்டிக் குப்பையால் துார்ந்த வடிகால்வாயால் சுகாதார சீர்கேடு
பிளாஸ்டிக் குப்பையால் துார்ந்த வடிகால்வாயால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 07, 2025 12:51 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சந்தவேலுார் ஊராட்சிக்குட்பட்ட, சுங்குவார்சத்திரம் வேளாங்கண்ணி நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், இப்பகுதியில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இங்குள்ள வீடுகளில் இருந்த வெளியேறும் பிளாஸ்டிக் குப்பையை, வேளாங்கண்ணி நகர் பிரதான சாலையோரம் உள்ள வடிகால்வாயில் வீசி செல்கின்றனர்.
வடிகால்வாய் முழுதும் பிளாஸ்டிக் குப்பை நிரம்பி உள்ளதால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் கால்வாயில் தேங்கி வருகிறது.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, வடிகால்வாயில் குவிந்துள்ள குப்பையை அகற்றி, சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.