/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 23, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கா ஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாநகராட்சி கட்டடத்தில், மீன் மற்றும் இறைச்சி அங்காடி ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது.
இங்குள்ள கடைகளில், மீன் மற்றும் இறைச்சியை சுத்தப்படுத்தும்போது வீணாகும் கழிவுநீர், பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், மீன் அங்காடியில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு 'மேன்ஹோலில்' அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் மீன், இறைச்சி கழிவுநீர் துர்நாற்றத்துடன் வழிந்தோடுகிறது.
இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
- கே.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம்.

