/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய குளம் பள்ள மொளச்சூரில் சுகாதார சீர்கேடு

ADDED : அக் 08, 2025 03:25 AM

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, பள்ள மொளச்சூர் கிராமத்தில் உள்ள பொதுக்குளம் முழுதும் பிளாஸ்டிக் குப்பைகள் மிதப்பதால், அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ள மொளச்சூர் கிராமத்தில், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் எதிரே பொது குளம் உள்ளது.
இக்குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குவதோடு, அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக குளத்தின் நீரை பயன்படுத்தி வந்தனர்.
சில ஆண்டுகளாக குளத்தின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது. அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர குப்பைகள் குளத்தில் கொட்டப்பட்டு, குளம் முழுதும் குப்பை மிதக்கிறது.
இதனால், குளத்தின் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.