/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்
/
உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்
உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்
உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்
ADDED : ஜன 21, 2025 01:14 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தலைமை அஞ்சலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், உழவர் சந்தை, சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், டாஸ்மாக் மதுபான கடை, பலசரக்கு மளிகை கடைகள் உள்ளன.
பழைய ரயில் நிலையம், பேருந்து நிலையம், பட்டு ஜவுளிக்கடைகள் அதிகம் நிறைந்த காந்தி சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், ரயில்வே சாலை வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், உழவர் சந்தை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, உழவர் சந்தை அருகே வாகனங்களை நிறுத்த போலீசார் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.