/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்குவாரி, கிரஷர்களிலிருந்து விதிமீறி செல்லும் கனரக லாரிகள்
/
கல்குவாரி, கிரஷர்களிலிருந்து விதிமீறி செல்லும் கனரக லாரிகள்
கல்குவாரி, கிரஷர்களிலிருந்து விதிமீறி செல்லும் கனரக லாரிகள்
கல்குவாரி, கிரஷர்களிலிருந்து விதிமீறி செல்லும் கனரக லாரிகள்
ADDED : செப் 23, 2024 05:51 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் கல் குவாரி, கிரஷர்களிலிருந்து விதிமுறையை மீறி கனரக லாரிகள் அளவுக்கு அதிகமாக லோடுகளை ஏற்றிக் கொண்டு தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செலகின்றன.
இதனால், அப்பகுதிகளிலுள்ள சாலைகள் சேதமடைவதோடு, விபத்துகள் ஏற்படுவது தொடர்கிறது. இதனால், ஒரு மாதமாகவே, வாலாஜாபாத் சுற்றியுள்ள ஆற்பாக்கம், அய்யம்பேட்டை, தாங்கி போன்ற இடங்களில் வருவாய் துறையினர் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில், 30க்கும் மேற்பட்ட விதிமீறி இயக்கப்பட்ட கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும், விதிமீறி கனரக லாரிகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
ஆனால், அங்கு லாரிகள் பறிமுதல் செய்வதும், அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் போதுமான அளவுக்கு இல்லாததால், விதிமீறும் லாரிகள் உத்திரமேரூர் சுற்றிய பகுதிகளில் பயமின்றி சென்று வருகின்றன.
உத்திரமேரூர் தாலுகாவில், விதிமீறி இயக்கப்படும் லாரிகள் மீது, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், மண்டல துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.