/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரவில் சாலை போடும் நெடுஞ்சாலை துறையினர்
/
இரவில் சாலை போடும் நெடுஞ்சாலை துறையினர்
ADDED : செப் 24, 2024 11:32 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, 2.5 கி.மீ., துாரம் பொன்னேரிக்கரை சாலை உள்ளது. இச்சாலை, 1.30 கோடி ரூபாய் செலவில், சாலை சீரமைப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றுள்ளது.
செப்.,28ல், தி.மு.க.,வின், 75ம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மைதானத்தில், தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
முதல்வரின் வருகை முன்னிட்டு, நெடுஞ்சாலைத் துறையினர், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையின் இருபுறமும் கறுப்பு, வெள்ளை நிற வர்ணம் அடித்து வருகின்றனர். அதை தொடர்ந்து, சாலை இருபுறமும் சரிந்து கிடக்கும் தடுப்பு கம்பிகளுக்கு பதிலாக, புதிய தடுப்பு கம்பிகளை பொருத்தி வந்தனர்.
நேற்று, இரவோடு இரவாக தார் சாலை போட்டு வருகின்றனர்.