/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
/
மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலை துறையினர் அகற்றம்
ADDED : அக் 23, 2025 10:27 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில், மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரத்தில், மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், நகரின் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
இதில், ரங்கசாமிகுளம் பகுதியில் மழைநீர் வெளியேறும் கான்கிரீட் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால், அப்பகுதியில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் குளம்போல தேங்கியது.
இதையடுத்து அப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்புகளை நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் இருந்த இரு கடைக்காரர்கள் கால்வாயை ஆக்கிரமித்து தங்களது கடையை விரிவாக்கம் செய்திருந்தனர்.
இதனால், கால்வாய் அடைப்பு நீக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றினர். தொடர்ந்து மழைநீர் வடிகால்வாயை முழுதும் துார்வாரி சீரமைத்தனர்.

