ADDED : மே 20, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், முருகர் மாநாட்டுக்கு செல்வது குறித்து ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலர் லட்சுமணன் தலைமையில், உத்திரமேரூரில் நேற்று நடந்தது.
கோட்ட செயலர் ஆர்.டி.மணி முன்னிலை வகித்தார். வரும் ஜூன் 22ம் தேதி, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்கு காவடி குழுக்கள், முருக பக்தர்களை மாநாட்டில் பங்கு பெற செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாநாட்டுக்கு செல்லும் பக்தர்களை ஒருங்கிணைக்க கமிட்டிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.