/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சரித்திர பதிவேடு ரவுடிக்கு 'குண்டாஸ்'
/
சரித்திர பதிவேடு ரவுடிக்கு 'குண்டாஸ்'
ADDED : பிப் 19, 2025 01:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 28. இவர் மீது, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஜன., 26ம் தேதி இரவு, தெரேசாபுரம் டாஸ்மாக் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு, நண்பர்களுடன் சூதாட்டம் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில், போந்துாரைச் சேர்ந்த நரேஷ் என்பவரை தலை மற்றும் கையில் சரமாரியாக அருண் வெட்டினார்.
இந்த வழக்கில், ஒரகடம் போலீசார் அருணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் பரிந்துரையின்படி, கலெக்டர் கலைச்செல்வி, குண்டர் தடுப்பு சட்டத்தில் அருணை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்கான ஆணையை வேலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அருணை சிறையில் அடைத்தனர்.