/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பு

ADDED : மார் 27, 2025 02:41 AM

கீழம்பி:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி ஊராட்சி, கிருஷ்ணாபுரத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 2019 - 20ம் நிதியாண்டில், 7.96 லட்சம் ரூபாய் செலவில், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த இயந்திரத்தில்,5 ரூபாய் நாணயம் செலுத்தி, குழாய் வாயிலாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அப்பகுதியினர் பிடித்து சென்றனர். இந்நிலையில், சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால், இரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் சுத்தி கரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான ரூபாய்செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலை பயன்பாடின்றி வீணாகி வருவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, கீழம்பி கிருஷ்ணாபுரத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.