/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : அக் 04, 2025 08:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:பாண்டவாக்கத்தில், வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து, 20 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் அடுத்த பாண்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 60; விவசாயி. நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிய இவர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டு அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 20 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரையடுத்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.