/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள்: அகற்ற படப்பை மக்கள் வலியுறுத்தல்
/
குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள்: அகற்ற படப்பை மக்கள் வலியுறுத்தல்
குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள்: அகற்ற படப்பை மக்கள் வலியுறுத்தல்
குளக்கரையை ஆக்கிரமித்து வீடுகள்: அகற்ற படப்பை மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2026 05:40 AM

படப்பை: படப்பையில் கோவில் குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை சுற்றி நடைபாதை அமைத்து சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சி, ஆதனஞ்சேரியில், வடுகாத்தை அம்மன் கோவில் குளம் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த 1990ம் ஆண்டிற்கு முன்வரை, இக்குளத்து நீரை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் பராமரிப்பின்றி உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
குளக்கரையின் மேற்கு பகுதி முழுதும் ஆக்கிரமித்து, 15 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. குளக்கரையில் இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தையும் அதன் அருகே உள்ள குளக்கரையையும் தனி நபர்கள், மாட்டு சாண வரட்டி தட்டும் இடமாக மாற்றியுள்ளனர். இதனால், இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, குளக்கரையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.