/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அ.தி.மு.க.,வினர் நடத்திய மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க.,வினர் நடத்திய மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 12, 2024 10:30 PM
தமிழகத்தில் போதைப்பொருட்களை, தி.மு.க., அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அ.தி.மு.க.,வினர் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், அ.தி.மு.க., சார்பில், காந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலர் செந்தில்ராஜன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய செயலர்கள் முனுசாமி, ராமசந்திரன் முன்னிலை வகித்தனர்.
இதில்,போதைப்பொருட்களால் வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிவுக்கு தி.மு.க., தான் காரணம் என கூறி, அ.தி.மு.க.,வினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வாலாஜாபாத் பேருந்து நிலையம் எதிரில். தி.மு.க., சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு, அமைப்பு செயலரும், உத்திரமேரூர் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கணேசன் தலைமை வகித்தார்.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் எதிரில், ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அ.தி.மு.க., மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
இதில், தி.மு.க., அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, தமிழகம் போதைப்பொருட்களின் தலைமையிடமாக மாறிவருகிறது, வருங்கால இளைஞர்கள், மாணவர்கள் எதிர்காலம் சிதைந்து வருகிறது என, கோஷமிட்டனர்.
- நமது நிருபர் குழு -

