ADDED : ஜன 31, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று மனித நேய வார நிறைவு விழாநடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு, மனிதநேயம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 160 மாணவ-- மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
