/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
ADDED : அக் 08, 2025 03:20 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு, மருத்துவர்கள் பங்கேற்கும் முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் உத்தரவை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை வழங்க, அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், நரம்பியல் மருத்துவர் அல்லது பொது மருத்துவர், கண் மருத்துவர், குழந்தை நல மருத்துவர் மற்றும் காது மருத்துவர் ஆகியோரை கொண்டு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த மருத்துவ முகாமை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி அடையாள அட்டையை பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.