/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போரூர் ஏரி கரையில் குவிக்கப்பட்ட சிலைகள்
/
போரூர் ஏரி கரையில் குவிக்கப்பட்ட சிலைகள்
ADDED : செப் 21, 2024 01:29 AM

போரூர்:போரூர் ஏரி கரையோரம், வீட்டில் வைத்து பூஜை செய்த விநாயகர் சிலைகள் மற்றும் விற்பனையின்றி தேங்கிய சிலைகள் மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்டு உள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை நகரின் பல்வேறு இடங்களில், பல ஆன்மிக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.
வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து, பொதுமக்கள் பூஜை செய்தனர். இந்நிலையில், வீடுகளில் பூஜை செய்த விநாயகர் சிலையை சிலர், போரூர் ஏரியில் கரைத்தனர்.
சிலர், சிலைகளை ஏரி கரையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், விற்பனையின்றி தேங்கிய விநாயகர் சிலைகளும், போரூர் ஏரி கரையோரம் குவிக்கப்பட்டு உள்ளன.