/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கள்ளச்சந்தையில் மது விற்பனை சேந்தமங்கலத்தில் ஜோர்
/
கள்ளச்சந்தையில் மது விற்பனை சேந்தமங்கலத்தில் ஜோர்
கள்ளச்சந்தையில் மது விற்பனை சேந்தமங்கலத்தில் ஜோர்
கள்ளச்சந்தையில் மது விற்பனை சேந்தமங்கலத்தில் ஜோர்
ADDED : நவ 12, 2025 10:46 PM
காஞ்சிபுரம்: கள்ளச்சந்தையில் மது கிடைப்பதால், சேந்தமங்கலம் கிராம பகுதியில் சட்டம்- - ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டிருப்பதாக, கிராம மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில், பின்னாவரம் ஊராட்சியில் சேந்தமங்கலம் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே, டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடை பிற்பகல் 12:00 மணி அளவில் திறக்கின்றனர். இதற்கு முன்னதாகவே, சேந்தமங்கலம் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை அமோகமாக நடக்கிறது.
மதுப்பிரியர்களும், கள்ளச்சந்தையில் மது கிடைப்பதால், சாலை ஓரங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் அருகே குடித்துவிட்டு சாலையில் செல்வோரிடம் வம்பிழுக்கின்றனர்.
இதனால், சேந்தமங்கலம் சாலையில் நடந்து செல்வோருக்கும், மதுபிரியர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்படுகிறது. சில நேரங்களில் கைகலப்பாக மாறியும் உள்ளது.
இது சம்பந்தமாக நெமிலி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
எனவே, சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

