/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கார்டில் திருத்தம் 108 மனுக்கள் உடனடி தீர்வு
/
ரேஷன் கார்டில் திருத்தம் 108 மனுக்கள் உடனடி தீர்வு
ரேஷன் கார்டில் திருத்தம் 108 மனுக்கள் உடனடி தீர்வு
ரேஷன் கார்டில் திருத்தம் 108 மனுக்கள் உடனடி தீர்வு
ADDED : மார் 10, 2024 01:22 AM
காஞ்சிபுரம்:உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தாலுகாவில் மேல்கதிர்பூர், உத்திரமேரூரில் களியாம்பூண்டி, வாலாஜாபாதில் சின்னிவாக்கம், ஸ்ரீபெரும்புதுாரில் கிளாய், குன்றத்துாரில் சென்னைகுப்பம் ஆகிய ஐந்து இடங்களில் நேற்று பொது வினியோக குறைதீர் கூட்டம் நடந்தது.
புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்ளிட்ட 133 மனுக்கள் வரப் பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 108 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள 25 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.

