/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை
/
காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை
காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை
காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை
ADDED : அக் 22, 2024 06:56 PM
காஞ்சிபுரம்:சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, 2008ம் ஆண்டு முதல், விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட 8 வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன.
நல வாரியம் வாயிலாக, நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள், 18 - 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாதவராக இருக்க வேண்டும். நல வாரிய உதவிகள் பெற நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்.
நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம், நாளை, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், உறுப்பினராக சேர்ந்து பயனடையலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.