/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா
/
வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா
ADDED : நவ 10, 2024 07:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கார்டியன் இந்தியா நிறுவன சமூக பொறுப்பு நிதியுதவியுடன், ‛ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம்' சார்பில், 12 லட்சம் ரூபாய் வகுப்பறை கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, இரு கட்டடங்களையும் நேற்று திறந்து வைத்தார்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன முதன்மை செயலாக்க அலுவலர் ராதாகிருஷ்ண கொண்டா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா தேவி வரவேற்றார்.
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்து பள்ளி குழந்தைகளுக்கு கலைக்குழு வாயிலாக பயிற்சி வழங்கப்பட்டது.