/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு
/
மின் தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : செப் 23, 2024 05:38 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட தலைவர், செயலர், பொருளாளர், துணை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
சங்கத்தின் மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் பொது செயலரும், சங்க ஆலோசகருமான வி.ஜீவனாந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில், சட்ட ஆலோசகர், நோட்டரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அரசு, முன்னாள் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி அருளானந்தம் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்தனர்.
இதை தொடர்ந்து, புதிய மாவட்ட தலைவராக மூர்த்தி, மாவட்ட செயலராக சிவாஜி, மாவட்ட பொருளாளராக ரஜினிகாந்த் மற்றும் துணை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.