/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்புலிவனத்தில் நிழற்குடை திறப்பு
/
திருப்புலிவனத்தில் நிழற்குடை திறப்பு
ADDED : மார் 17, 2024 02:03 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், திருப்புலிவனம் உள்ளது. திருப்புலிவனம், மருதம், வாடாதவூர் சடச்சிவாக்கம், ஆண்டித்தாங்கல், அழிசூர் உள்ளிட்ட கிராமத்தினர், இப்பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காஞ்சிபுரம்,- உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இப்பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி இல்லாததால் பயணியர் மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனிடையே, திருப்புலிவனம் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைக்க, காஞ்சிபுரம் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கநல்லுாரில், 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில், உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

