/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆன்மிக சுற்றுலா பயணம் கலெக்டர் துவக்கி வைப்பு
/
ஆன்மிக சுற்றுலா பயணம் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : செப் 22, 2024 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில், வைணவ திருத்தலங்கள் ஆன்மிக சுற்றுலா பயணத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஆன்மிக பயணம் வைகுண்ட பெருமாள் கோவிலில் துவங்கி, தேவராஜசுவாமி கோவில் என, அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள், பாண்டவ துாத பெருமாள், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி ஆகிய கோவில்களுக்கு செல்ல உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ராமதுரை மற்றும் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.