/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.73 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு
/
ரூ.73 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : பிப் 17, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் ஒன்றியம், கோவூர் ஊராட்சிக்கு உட்பட்ட புது வட்டாரம் பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை. இதை கருத்தில் கொண்டு, 73 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, குழந்தைகள் நேய பள்ளி கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.
இந்த கட்டடத்தில், அறிவியல், தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான வரைபடங்களும், பாடப் பிரிவுகளும் வரையப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க, இது உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.