/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று பாலத்தில் விபத்துகள் அதிகரிப்பு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

ADDED : ஜூன் 22, 2025 08:39 PM
ஒரக்காட்டுப்பேட்டை:உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் இருந்து, பாலாற்றின் குறுக்கே செங்கல்பட்டு பைபாஸ் சாலையை இணைக்கும் பாலம், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த பாலத்தின் வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இரவு வரை இந்த பாலத்தின் வழியாக பயணிக்கின்றனர்.
இந்த மேம்பாலத்தின் மீது இதுவரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் பாலத்தின் மீது இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.
ஒரக்காட்டுப்பேட்டை மற்றும் காவூர் கிராமத்தை சுற்றியுள்ள செங்கல் சூளையில் இருந்து ஏராளமான லாரிகள் இரவு, பகலாக இந்த பாலத்தின் சாலையில் இயங்குகிறது.
மின் வசதி இல்லாததால் லாரிகளை கடக்கும் இருசக்கர வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகின்றன.
ஒரு மாதத்தில் மட்டும் இருசக்கர வாகன வாயிலாக பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, ஒரக்காட்டுபேட்டை பாலத்தின் மீது மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒரக்காட்டுப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.