/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் மாதிரி சேகரிப்பு காஞ்சியில் அதிகரிப்பு
/
மண் மாதிரி சேகரிப்பு காஞ்சியில் அதிகரிப்பு
ADDED : மார் 11, 2024 11:02 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில், நெல், உளுந்து, எண்ணெய் வித்து பயிர்கள் என, பல வித பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் சாகுபடி செய்யப்படும் நிலங்களில், வேளாண் துறையினர் மூலமாக, மண் மாதிரி சேகரித்து உர செலவினங்களை குறைக்க, வேளாண் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதன்படி, 2022 - -23ம் நிதி ஆண்டில், 1,386 மண் மாதிரிகளை வேளாண் துறையினர் சேகரித்து, மண் வள அட்டையில், உரங்கள் பரிந்துரை எழுதி கொடுத்துள்ளனர்.
அதேபோல, 2023- - 24ம் நிதி ஆண்டில், 2,382 மண் மாதிரிகளை வேளாண் துறையினர் சேகரித்து, மண் வள அட்டையில் உரங்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.
கடந்த, 2022- - 23ம் நிதி ஆண்டை காட்டிலும், 2023 - -24ம் நிதி ஆண்டு, 996 மண் மாதிரிகள் அதிகமாக உள்ளன.
இதன் வாயிலாக, விவசாயிகள் சாகுபடி செய்யும் பரப்பிற்கு ஏற்ப உர செலவு குறைந்து உள்ளது என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

