/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
/
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : மே 30, 2025 10:27 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரிடம், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.
அனுமதி
இதில், சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சொர்ணவாரி பருவத்தில், தண்ணீர் பற்றாக்குறை, கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 30,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
சொர்ணவாரி மற்றும் நவரை ஆகிய இரு பருவத்திற்கும், நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர்.
இதன் வாயிலாக, கணிசமான நெல் கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி கூட்டுறவு துறைக்கு கொடுத்து விடுகின்றனர்.
இதில், நவரை பருவத்திற்கு மட்டும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், மாவட்டம் முழுதும் துவக்க அனுமதி அளிக்கின்றனர்.
நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நவரை பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர்.
வாய்ப்பு
கடந்த 2022-23ம் நிதி ஆண்டு, 23,426 விவசாயிகளிடம் இருந்து, 1.26 லட்சம் டன் நெல்; 2023--24ம் நிதி ஆண்டு, 21,905 விவசாயிகளிடம் இருந்து, 1.41 லட்சம் டன் நெல் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பு, 2024--25ம் நிதி ஆண்டு, 14,433 விவசாயிகளிடம் இருந்து, 1 லட்சம் டன் நெல் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்துள்ளனர்.
இதில், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் கொள்முதல் செய்த நெல் கணக்கீடு செய்யப்படுகிறது. தோராயமாக இரு நிர்வாகங்களின் கீழ் கொள்முதல் செய்யப்படும் நெல்லை கணக்கீடு செய்தால், 22,000 விவசாயிகளின் எண்ணிக்கையும், 1.45 லட்சம் டன் நெல் என, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் நெல் விற்பனை நிலையங்களை காட்டிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழத்தில் கூடுதல் நெல்லுக்கு கூடுதல் விலை கொடுப்பதால், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்கின்றனர்.
இதனால், ஆண்டுதோறும் விவசாயிகளின் எண்ணிகையும், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் எடையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.