/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு
/
இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : டிச 26, 2024 12:58 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய காஞ்சிபுரம்இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர்சு.மனோகரன், இரு ஆண்டுகளாக சிறப்பாக ஒத்துழைப்பு நல்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதில், 2025ம் ஆண்டு சங்க புதிய தலைவராகடாக்டர் வெ.ரவி, மதிப்புறு செயலராக டாக்டர்வெ.முத்துக்குமரன், பொருளாளராக பேராசிரியர் டாக்டர் ஆ.ஞானவேல் மற்றும் 2026ம் ஆண்டிற் கான தலைவராக டாக்டர் கா.சு.தன்யகுமார் உட்பட 15 நிர்வாகிகள் பதவியேற்றனர்.
மாநில தலைவர் பதவி ஏற்பு உறுதிமொழியை படிக்கச் செய்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விழாவில் முன்னாள் நிர்வாகிகள் உட்பட65 மருத்துவர்கள் பங்கேற்றனர்.