/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
/
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
மழைக்கு ஒழுகும் அங்கன்வாடி புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2024 10:45 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு ஓரிக்கை, காந்தி நகரில், கடந்த 2007ல் மாவட்ட சிறுசேமிப்பு ஊக்க நிதியில், 1.52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாதததால், இக்கட்டத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, மழையின்போது உட்புற சுவரில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. ஜன்னலுக்கு மேலே உள்ள சன்சைடும் சேதமடைந்துள்ளது.
கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால், குழந்தைகள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. கழிப்பறை வசதி இல்லாததோடு, கட்டடம் சேதமடைந்துள்தால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
எனவே, ஓரிக்கை காந்தி நகரில், சிதிலமடைந்த நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.