தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா :சீரமைக்க வலியுறுத்தல்
தலைசாய்ந்த 'சிசிடிவி' கேமரா :சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 07, 2026 06:13 PM

களியனுார்: வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் மூன்றுமுனை சந்திப்பில், தலை சாய்ந்த நிலையில் உள்ள 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் மாவட்டம் முழுதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும், மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் மும்முனை சாலை சந்திப்பில், ஊராட்சி நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஒன்று மட்டும் தலை சாய்ந்த நிலையில் உள்ளது.
இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
இதனால், இப்பகுதியில் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.
எனவே, தலை சாய்ந்த நிலையில் உள்ள 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
