/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை பணியால் உடைந்த குழாயை சீரமைக்க வலியுறுத்தல்
/
பாதாள சாக்கடை பணியால் உடைந்த குழாயை சீரமைக்க வலியுறுத்தல்
பாதாள சாக்கடை பணியால் உடைந்த குழாயை சீரமைக்க வலியுறுத்தல்
பாதாள சாக்கடை பணியால் உடைந்த குழாயை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 01:41 AM

செவிலிமேடு:செவிலிமேடில், பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டியபோது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 42வது வார்டு செவிலிமேடு, பெரிய தெருவில், பாதாள சாக்கடை திட்ட பணிக்காக, கடந்த வாரம் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 'மேன்ஹோல் சிமென்ட் தொட்டி' அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளம் தோண்டியபோது, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சீரமைக்கவில்லை. இதனால், குழாயில் இருந்து வெளியேறிய குடிநீரால் சாலை சகதியாக மாறியுள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செவிலிமேடு பெரிய தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.