/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிணற்றின் கம்பி வலை சீரமைக்க வலியுறுத்தல்
/
கிணற்றின் கம்பி வலை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 27, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்தேரி,:காஞ்சிபுரம் ஒன்றியம் புத்தேரி ஊராட்சி, சாலபோகம் ரேஷன் கடை எதிரே உள்ள திறந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், அப்பகுதியினருக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கிணற்றின் மீது மூடப்பட்டுள்ள கம்பி வலையின் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது. இதனால், காற்றில் பறக்கும் குப்பை கழிவுகள், கிணற்றில் விழும் நிலை உள்ளது. அதேபோல பறவைகள், எலி, தவளை உள்ளிட்டவை கிணற்றில் விழுந்து இறந்தால், குடிநீர் மாசடையும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றின் இரும்பு கம்பி வலையை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

