/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடி கால்வாய் துார்வார வலியுறுத்தல்
/
மழைநீர் வடி கால்வாய் துார்வார வலியுறுத்தல்
ADDED : ஏப் 01, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடல்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேடல் கிராமத்தில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் வடிகால்வாய் உள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் செடிகள் வளர்ந்தும், மண் திட்டுகளாலும் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும், விவசாய நிலங்களையும் சூழும் நிலை உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேடல் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.