/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழுதடைந்த 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
/
பழுதடைந்த 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2024 11:18 PM

ஆற்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் மாவட்டம் முழுதும் நடமாட்டம் மிகுந்த பகுதி, பிரதான சாலைகளில், மாவட்ட காவல்துறை சார்பில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கம் -- மாமண்டூர் சாலை சந்திப்பில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கேமராவின் இணைப்பு ஒயர் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்றச்சம்பவம் நடந்தாலும், குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பிச் செல்வோரை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஆற்பாக்கத்தில், இணைப்பு ஒயர் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.