/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் 20 இடங்களில் மின் விளக்குகள் பொருத்தும் பணி
/
உத்திரமேரூரில் 20 இடங்களில் மின் விளக்குகள் பொருத்தும் பணி
உத்திரமேரூரில் 20 இடங்களில் மின் விளக்குகள் பொருத்தும் பணி
உத்திரமேரூரில் 20 இடங்களில் மின் விளக்குகள் பொருத்தும் பணி
ADDED : மே 26, 2025 01:01 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, 18 வார்டுகளில், 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள கம்பங்களில், டியூப் லைட், சி.எப்.எல்., சோலார் லைட் ஆகியவை பொருத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, பல இடங்களில் மின் விளக்குகள் சரிவர ஒளிர்வதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்திருந்தது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, எல்.எண்டத்தூர் சாலை, நடுத்தெரு ஆகிய இடங்களில், 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று நடந்தன.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் 20, 40, 90 மற்றும் 120 வாட்ஸ் ஒளிரும் திறன் கொண்ட எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றும் பணி நேற்று நடந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.