ADDED : டிச 05, 2024 11:50 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அலுவலகத்தில்குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் சர்வதேச தன்னார்வலர் தின விழா நேற்று நடந்தது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் தலைமைவகித்தார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி., மார்ட்டின் ராபர்ட், மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் இருந்து வந்திருந்த, குழந்தை உரிமை பாதுகாப்பு குழு தன்னார்வ உறுப்பினர்களுக்கு வாழ்த்துரை வழங்கி வாழ்த்து மடல்களை வெளியிட்டதுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதில், 50க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், முதன்மை மேலாளர்கள் கிருபாகரன், சுந்தர், துாயவன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்பங்கேற்றனர்.
முதன்மை மேலாளர் தேவேந்திரன் வரவேற்றார். மாவட்ட திட்ட மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.