/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விசாரணை குழுவினர் மேவளூர்குப்பத்தில் ஆய்வு
/
விசாரணை குழுவினர் மேவளூர்குப்பத்தில் ஆய்வு
ADDED : நவ 21, 2024 07:54 PM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேவளூர்குப்பம் ஊராட்சி தலைவராக அபிராமி பதவி வகித்து வருகிறார்.
இவர், ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமலேயே, 3.75 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும்; ஊராட்சி தலைவரின் கணவரின் நிறுவனத்திற்கு, அனைத்து விதமான பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்குவதாகவும்; ஊராட்சி தலைவரின் கணவர், ஊராட்சி ஆலோசகர் என, அரசாங்க முத்திரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருவதாக, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் புகார் அளித்து உள்ளனர்.
இந்த புகார் மனுவை விசாரிக்க, காஞ்சிபுரம் மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி தலைமையில், ஐந்து நபர்கள் அடங்கிய குழுவினரை, மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.
இந்த குழுவினர், மேவளூர்குப்பம் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.