/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயிர் மகசூல் போட்டிக்கு அழைப்பு
/
பயிர் மகசூல் போட்டிக்கு அழைப்பு
ADDED : டிச 14, 2024 08:09 PM
காஞ்சிபுரம்:வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் பயிர் மகசூல் போட்டி நடந்து வருகிறது. நடப்பாண்டிற்குரிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் மகசூல் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கரும்பு, மணிலா, உளுந்து, பச்சைப்பயிறு, எள், செம்மை நெல் மற்றும் பாரம்பரிய ரக நெல் ஆகிய விளைபொருட்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கேற்கலாம்.
மாநில அளவில் பயிர் மகசூல் போட்டிக்கு, 150 ரூபாய் மற்றும் மாவட்ட அளவில் பயிர் மகசூல் போட்டிக்கு, 100 ரூபாய் என, தனித்தனி போட்டிக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு சென்று, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
பயிர் மகசூல் போட்டிகளின் நெறிமுறைகளை கடைப்பிடித்து விவசாயிகள் பயன்பெறலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.