ADDED : டிச 05, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், நவரை பருவத்திற்கு தேவையான, ஆடுதுறை - 37, மகேந்திரா- 1010, கோவை - 51, டி.கே.எம்., - 13, திருப்பதிசாரம் - 5 ஆகிய நெல் மற்றும் ஒன்பது டன் உளுந்து, 10 டன் பாசிப்பயறு, 8.5 டன் நிலக் கடலை ஆகியவை வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணை கிடங்கு நிலையங்களில் இருப்புவைக்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் இடுபொருட்களை மானிய விலையில் பெற்று பயன் பெறலாம் என, வேளாண் இணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.