/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருளர் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு துவக்கம்
/
இருளர் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : பிப் 16, 2024 10:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், குளக்கரை, சாலை ஓரம் மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில், இருளர் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, போதிய கான்கிரீட் வீடுகள், சாலை, மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் அறவே இல்லை என, குற்றச்சாட்டு எழுந்தன.
இது போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு, மத்திய அரசு, 'ஜன்மான்' திட்டம் கொண்டு வந்துள்ளது. இதில், பழங்குடி இனத்தவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு, தேவையான சாலை, குடிநீர், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி காஞ்சிபுரம்மாவட்டத்தில், 174 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த பணியில், ஊராட்சி செயலர், அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறையினர் இருளர் குடிசை வீடுகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
இதை மொபைல் போன் செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு, தரமான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வழி வகுக்கும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.