/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
147 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்
/
147 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்
ADDED : அக் 01, 2024 02:47 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மனுக்கள் மீது வருவாய் துறையினர் பரிசீலனை மேற்கொண்டு வந்தனர்.
சரியான ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்த, தகுதியான பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 147 பயனாளிகளுக்கு குடும்ப மின்னணு அட்டைகள் வழங்கி பேசினார்.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ள மற்றவர்களின் மனுக்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்தடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா மற்றும் வட்டாட்சியர் தேன்மொழி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனார்.