/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.318 கோடியில் குடிநீர் பணிக்கு 'டெண்டர்' புதிதாக 55,000 இணைப்புகள் வழங்க முடிவு
/
ரூ.318 கோடியில் குடிநீர் பணிக்கு 'டெண்டர்' புதிதாக 55,000 இணைப்புகள் வழங்க முடிவு
ரூ.318 கோடியில் குடிநீர் பணிக்கு 'டெண்டர்' புதிதாக 55,000 இணைப்புகள் வழங்க முடிவு
ரூ.318 கோடியில் குடிநீர் பணிக்கு 'டெண்டர்' புதிதாக 55,000 இணைப்புகள் வழங்க முடிவு
ADDED : பிப் 09, 2024 10:47 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல் மற்றும் ஓரிக்கை ஆகிய இரு பாலாறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு வசிக்கும் இரண்டு லட்சம் பேரில், ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு, 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், மாநகராட்சிக்கே 23.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் ஒரு நாளைக்கு கிடைக்கிறது.
இதனால், ஒவ்வொரு நபருக்கும், 100 லிட்டர் மட்டுமே தண்ணீர் வழங்க முடிகிறது. வரும் 2035ம் ஆண்டுக்கான எதிர்கால கணக்கீட்டின்படி, 59.0 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
எனவே, எதிர்கால தேவையை கணக்கிட்டு விரிவான திட்டம் தேவைப்படுவதால், உலக வங்கி நிதியுதவியுடன், புதிய குடிநீர் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2035ம் ஆண்டு, 4.36 லட்சம் பேர் வசிப்பர்என்பதாலும், புதிதாக இணைக்கப்பட்டுள்ள செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக மக்கள் வசிப்பர் என்பதால், 300 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதையடுத்து, நிதி ஒதுக்கீடுக்கு காத்திருந்த நிலையில், உலக வங்கி நிதியுதவி செய்துள்ளது. அதன்படி, 318 கோடி ரூபாய் மதிப்பில், விரிவான குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், மாநகராட்சி முழுதும் உள்ள குடியிருப்பு, வணிக ரீதியில் என, 32,687 குடிநீர் இணைப்புகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இப்புதிய திட்டத்தின் கீழ், 55,000 குடிநீர் இணைப்புகள் மேலும் வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே, 94 குடிநீர் தொட்டிகள் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், 14 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இத்திட்டத்தில் கட்டப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்கு, 318 கோடி ரூபாய்க்கான பணிகள் மேற்கொள்ள, காஞ்சிபுரம் மாநகராட்சி 'டெண்டர்' விட்டுள்ளது.
'டெண்டர்' எடுக்கும் நிறுவனம், அடுத்த 12 மாதங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.