/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜமாபந்தி முகாம் வரும் 21ல் துவக்கம்
/
ஜமாபந்தி முகாம் வரும் 21ல் துவக்கம்
ADDED : மே 06, 2025 12:29 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆண்டுதோறும் வருவாய் துறை சார்பில், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஜமாபந்தி முகாம், இம்மாதம் 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வருவாய் துறை கணக்கீடுகள், பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மீதும் இந்த ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு தாலுகாவிற்கும் வருவாய் தீர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், பொதுமக்கள் வருவாய் துறை சம்பந்தமான மனுக்களை அளிக்கலாம்.
அந்த வகையில், உத்திரமேரூர் தாலுகாவிற்கு கலெக்டரும், காஞ்சிபுரம் தாலுகாவிற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், வாலாஜாபாத்திற்கு காஞ்சிபுரம் சப் - கலெக்டரும், ஸ்ரீபெரும்புதுாருக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், குன்றத்துார் தாலுகாவிற்கு ஸ்ரீபெரும்புதுார் சப் - கலெக்டரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.