/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
/
ஸ்ரீபெரும்புதுாரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
ADDED : பிப் 25, 2024 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட பாசறை துணைச் செயலர் மோகன் தலைமையில் வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைச் செயலர் எஸ்.செந்தில்ராஜன் பங்கேற்று, ஜெயலலிதா படத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து, 1,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயலர்சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ., பழனி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.