/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழம்பியில் வேலை வாய்ப்பு முகாம்
/
கீழம்பியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 12, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழம்பி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், வரும் 16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், காலை 9:00 மணி முதல் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில், அனைத்து கல்வி தகுதியினரும் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அலுவலகத்தை 044 27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.