/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இணை ஆணையர் அலுவலகம் கட்டுமானப் பணி இன்று துவக்கம்
/
இணை ஆணையர் அலுவலகம் கட்டுமானப் பணி இன்று துவக்கம்
ADDED : மார் 08, 2024 01:28 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம், காஞ்சிபுரம் ஏ.கே.டி., தெருவில், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, காஞ்சிபுரம்ஓணகாந்தேஸ்வரர்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 3 கோடி ரூபாய் செலவில், காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்ட உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று, காலை 11:30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக கட்டுமானப் பணியை துவங்கி வைக்கிறார் என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

