/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன வழக்குகள் தேக்கம் நடமாடும் நீதிமன்றத்திற்கு நீதிபதி தேவை
/
வாகன வழக்குகள் தேக்கம் நடமாடும் நீதிமன்றத்திற்கு நீதிபதி தேவை
வாகன வழக்குகள் தேக்கம் நடமாடும் நீதிமன்றத்திற்கு நீதிபதி தேவை
வாகன வழக்குகள் தேக்கம் நடமாடும் நீதிமன்றத்திற்கு நீதிபதி தேவை
ADDED : பிப் 04, 2024 05:57 AM
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், நடமாடும் நீதிமன்றத்திற்கு நீதிபதி இல்லாததால், ஆயிரக்கணக்கான மோட்டார் வாகன வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. நடமாடும் நீதிமன்ற வாகனம் இயக்கப்படாமல் முடங்கி உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில், வாகன ஓட்டிகள் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் செல்வது, போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, வாகன ஓட்டிகள் அபராதத்தொகை செலுத்தி வந்தனர். இதனால், வழக்குகள் தேக்கம் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
இதைத்தவிர்க்க, 2012ம் ஆண்டு, அக்., 30ல் நடமாடும் நீதிமன்றம் துவக்கப்பட்டது. அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு, ஒவ்வொரு நாள் சென்று, வழக்குகளை விரைந்து முடித்தனர்.
இதில், காஞ்சிபுரத்தில் மட்டும் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெறும். அப்போது, வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டன.
நடமாடும் நீதிமன்றத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீதிபதி நியமிக்கப்படாததால், அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, நடமாடும் நீதிமன்றத்திற்கும் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், நடமாடும் நீதிமன்றம் செயல்படாமல் முடங்கியுள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட வாகனம், காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால், மோட்டார் வாகன வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
எனவே, வழக்காடிகள் நலன் கருதி, நீதிமன்றத்திற்கு நீதிபதி மற்றும் ஊழியர்கள் நியமித்து, மேற்கண்ட பகுதியில் மீண்டும் இயங்க, மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நடமாடும் நீதிமன்றம் இயங்கியபோது, மோட்டார் வாகன வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் தண்டிக்கப்பட்டனர். தற்போது, நடமாடும் நீதிமன்றம் இயங்காததால், மாவட்ட நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அங்கு, நீண்ட நேரம் காத்திருப்பதால், கால விரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது. எனவே, நீதிபதி மற்றும் ஊழியர்கள் நியமிக்க, உயர் நீதிமன்றம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சமூக ஆர்வலர்கள்,
செங்கல்பட்டு.