/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளர்பிறை அஷ்டமியில் கால பைரவர் வழிபாடு
/
வளர்பிறை அஷ்டமியில் கால பைரவர் வழிபாடு
ADDED : டிச 09, 2024 01:44 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள கால பைரவர் உற்சவருக்கு கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு கால பைரவர் உற்சவருக்கு இளநீர், பால், தயிர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், ஜவ்வாது, விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பைரவரை வழிபட்டனர்.
கைலாசநாசர் கோவில்
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் காமகோட்டி அம்பாள் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கார்த்திகை சோமவார பெருவிழா இன்று நடைபெறுகிறது.
விழாவையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை 6:00 மணிக்கு, காமகோட்டி அம்பாளுடன், ரிஷப வாகனத்தில், மலர் அலங்காரத்தில், எழுந்தருளும் கைலாசநாதர் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
விழாவிற்கான ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறையினர், கோவில் அறங்காவலர் குழுவினர், நால்வர் நற்பமணி மன்றத்தினர் செய்துள்ளனர்.