/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தார்ப்பாய் தயவில் இயங்கும் கடல்மங்கலம் ரேஷன் கடை
/
தார்ப்பாய் தயவில் இயங்கும் கடல்மங்கலம் ரேஷன் கடை
ADDED : ஜன 12, 2024 10:09 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, கடல்மங்கலம் கிராமம். இங்குள்ள ரேஷன் கடையில், 380 குடும்ப அட்டைதாரர்கள் பயனாளிகளாக உள்ளனர்.
இந்த ரேஷன் கடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது, மிகவும் பழுதடைந்து, மழை நேரங்களில் தளத்தின் வழியாக மழைநீர் சொட்டுகிறது.
அச்சமயங்களில், ரேஷன் கடையில் இருப்பு உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.
கடைக்குள் மழை நேரங்களில் நீர் சொட்டுவதை தவிர்க்க தளத்தின் மேல் தார்ப்பாய் போர்த்தப்பட்டுள்ளது.
எனவே, பழுதடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.