/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி வாயிற்கதவை சீரமைக்க காலுார் மக்கள் வலியுறுத்தல்
/
பள்ளி வாயிற்கதவை சீரமைக்க காலுார் மக்கள் வலியுறுத்தல்
பள்ளி வாயிற்கதவை சீரமைக்க காலுார் மக்கள் வலியுறுத்தல்
பள்ளி வாயிற்கதவை சீரமைக்க காலுார் மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 27, 2025 01:20 AM

காலுார்,
காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு சுற்றுச்சுவருடன், இரும்பு கம்பியால் செய்யப்பட்ட பிரதான வாயிற்கதவு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மெல்லிய கம்பி என்பதால், இரும்பு கதவு வளைந்து சேதமடைந்துள்ளது. இதனால், பிரதான கதவை மூட முடியாத நிலை உள்ளது.
இதனால், திறந்து கிடக்கும் பள்ளி பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பள்ளி வளாகத்தை அசுத்தப்படுத்துகின்றன.
விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள், பள்ளி வளாகத்திற்குள் மது அருந்துவது, சூதாட்டம் ஆடுவது உள்ளிட்ட சமூக விரோத அரங்கேறும் சூழல் உள்ளது.
எனவே, காலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சுற்றுச்சுவருக்கு சேதமடைந்த நிலையில் உள்ள பழைய பிரதான வாயில் கதவை அகற்றிவிட்டு, தரமான புதிய கதவை அமைக்க வேண்டும் என, காலுார் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.